என் அமைச்சரவையில் லோகேஷ்க்கு இந்தத் துறையைத் தருகிறேன்: விஜய்
லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் பேசிய கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.
லியோ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று (நவ.1) சென்னையில் இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய்யிடம் தொகுப்பாளர், “லோகேஷ் கனகராஜ் உங்க கட்சியில் இணைந்தால் என்ன பொறுப்பு கொடுப்பீர்கள்?” எனக் கேள்வி கேட்டார். அதற்கு கற்பனையாகத்தானே கேட்கிறீர்கள் என்று சிரித்தவர், “லோகேஷ்க்கு போதைப்பொருள் ஒழிப்பு இலாகா என புதிய துறையைத் துவங்கி அதில் அவரை அமைச்சராக நியமனம் செய்வேன்” என்றார்.
இதையும் படிக்க: காக்கா...கழுகு...: விஜய்யின் குட்டி ஸ்டோரி!
Advertisement
Advertisement
இதைக்கேட்ட ரசிகர்கள், சிரிப்பை அடக்க முடியாமல் கூச்சல் போட்டனர். காரணம், லோகேஷ் கனகராஜ் தன் படங்களில் போதைப் பொருள்களைக் குறித்தே கதையை அமைக்கிறார்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.