வைரல் நடிகை உர்ஃபி ஜாவத் கைது!
வித்தியாசமான கவர்ச்சி உடைகளை அணிந்து பிரபலமான நடிகை உர்ஃபி ஜாவத், மும்பை காவல்துறையால் செய்து செய்யப்பட்டிருக்கிறார்.
ஆள் பாதி, ஆடை பாதி என்பது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நடிகை உர்ஃபி ஜாவத்துக்குப் பொருந்தும். காரணம், கவர்ச்சியான ஆடைகளை அணிந்து பிரபலமான உர்ஃபி, பல முறை தன் ஆடைகளால் சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறார்.
இந்நிலையில், மும்பையில் இன்று காலை காபி அருந்துவதற்காக அவர் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு, திடீரென அவரைச் சூழ்ந்த பெண் காவலர்கள் உர்ஃபி ஜாவத்தைக் கைது செய்வதாகக் கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
காரணமாக, பொது இடத்தில் முழு முதுகும் தெரியும்படி அநாகரிகமான ஆடையை அணிந்து வந்தததாலேயே கைது செய்ததாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், உர்ஃபியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.