லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உறியடி விஜய் குமார்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை லோகேஷ் இயக்கியிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது ,லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவரே தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான்: மகேஷ் பாபு பாராட்டு!
Advertisement
Advertisement
சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஜி-ஸ்குவாட் (G-squad) என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதை தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் படங்களை தயாரிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பருத்தி வீரனுக்காக அமீர், ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வேலை செய்திருப்பார்: இயக்குநர் சந்திரா தங்கராஜ்
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், உறியடி விஜய்குமார் படத்தினை தனது முதல் படமாக அறிவித்துள்ளார். நாளை (நவ.29) மாலை 6 மணிக்கு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய்குமார், லோகேஷ் கனகராஜ்ஜின் நீண்ட நாள் நண்பர். உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.