வெளியானது லியோ டிரைலர்!
விஜய் நடிப்பில் உருவான லியோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாகவுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
லியோ திரைப்படத்திற்கான சென்சார் இன்று (அக்.3) நடைபெற்ற நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் குழுவினர் வழங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் சப்த சாகரதாச்சே எல்லோ திரைப்படம்!
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையில் இதன் அதிரடி காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.