61 வயதிலும் அசத்தும் அர்ஜுன்!
நடிகர் அர்ஜுன் லியோ டிரைலரில் மிகவும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளார்.
தமிழில் நடிகராகவும் இயக்குநராகவும் பிரபலமானவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அவரது சண்டைப் பயிற்சிக்காக எப்போதும் புகழ் பெற்றவர். தெலுங்கு, கன்னடம் என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. படம் அக்.19 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதையும் படிக்க: லியோ டிரைலரில் தகாத வார்த்தை: சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்!
Advertisement
Advertisement
டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுவரை 42 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரெண்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இதில் நடிகர் அர்ஜுன் ஹெரோல்ட் தாஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டர் ரிலீஸ் அப்போதே மிகவும் கவர்ந்த அர்ஜுன் தற்போது டிரைலரில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதையும் படிக்க: இந்திய சினிமாவில் முதன்முறை: ஜவான் வரலாற்று சாதனை!
61 வயதிலும் இவ்வளவு அழகாக உடலை தயார்படுத்தியிருக்கிறாரே என ரசிகர்கள் அர்ஜுனை புகழ்ந்து வருகிறார்கள். அவரது தொடர்ச்சியான உடற்பயிற்சியே இதற்கு காரணமெனவும் ‘நம்ம ஊர் டாம் குரூஸ்’ எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.