முகப்பு
செய்திகள்

விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 : முன்னோட்டக் காட்சி வெளியானது!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2023, 11:59 am IST
பகிர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்தத் தொடரில் பல முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வபோது மாறினாலும்,  5 ஆண்டுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையை இத்தொடர் அடைந்துள்ளது.

இந்தத் தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இறுதிநாள் படப்பிடிப்பில் தொடரில் நடித்த மற்றும் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, முதல் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது.

இதில், மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக எடுக்கப்பட்டது.

ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படை கொண்ட கதையாக தெரிகிறது. இத்தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments