புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்....
புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக புதுச்சேரிக்கு இன்று இரவு வருகை தரவுள்ளார். நாளை ஆகஸ்ட் 9-ஆம் தேதி கோரிமேடு காவல்துறை திடலில் நடைபெறும் புதுச்சேரி காவல் துறையின் குடியரசுத் தலைவர் வண்ணக் கொடி விருது வழங்கும் நிகழ்வில் அவர் பங்கேற்கிறார். அமித்ஷா வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் சுமார் 1,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் சி.ஆர்.பி.எப். வீரர்களைக் கொண்ட 8 கம்பெனிகளும், உள்ளூர் போலீஸார், இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் ஆயுதப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி முழுவதும் மோப்ப நாய் பிரிவு மூலம் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
விமான நிலையம் முதல் அமித் ஷா தங்குமிடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலான முக்கிய சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உழவர்கரை நகராட்சி பகுதிகள் ‘நோ-ஃப்ளை சோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளதால், ட்ரோன்கள் உள்ளிட்ட பறக்கும் சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை பிற்பகல் புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் தலைமையில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற உள்ளது.
இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதுமட்டுமல்லாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணிக்கும் சாலையோரத்தில் மதுபான கடைகள், ஓட்டல்கள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
Heavy security deployed in Puducherry in view of Union Home Minister Amit Shah's arrival
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.