FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

லியோ திரையிடப்படவில்லை: பிரபல திரையரங்கம்!

விஜய்யின் லியோ திரைப்படத்தை திரையிடப்போவதில்லை என பிரபல திரையரங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது

Updated On : 18 அக்டோபர் 2023, 6:17 pm IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

லியோ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் அண்ணனின் லியோ தரம் (தம்ப்ஸ் குறி) லோகேஷ் கனகராஜின் சிறப்பான உருவாக்கம். அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸுக்குப் பாராட்டுக்கள். எல்சியூதான். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், பல திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை வரை டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் லியோ படத்தை வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது. இதுகுறித்தான அறிவிப்புப் பலகையைக் கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

முன்னதாக, இந்தத் திரையரங்கத்தில் லியோ டிரைலரைக் கண்ட ரசிகர்கள், 400க்கும் மேற்பட்ட இருக்கைகளை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments