முகப்பு
செய்திகள்

மோகன்லால், மம்மூட்டியைப் பின்னுக்குத் தள்ளிய விஜய்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் கேரளத்தில் வசூல் சாதனையை நிகழ்த்த உள்ளதாக தகவல்.

Updated On : 18 அக்டோபர் 2023, 3:08 pm IST
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்.19-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது.

இதுவரை எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவிற்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

லியோ படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் அண்ணனின் லியோ தரம் (தம்ப்ஸ் குறி) லோகேஷ் கனகராஜின் சிறப்பான உருவாக்கம். அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸுக்குப் பாராட்டுக்கள். எல்சியூதான். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கேரளத்தில் லியோ திரைப்படம்  முதல்நாளில் 2,263 காட்சிகளுடன் வெளியாகிறது. இதுவரை எந்த ஒரு மலையாள நடிகருக்கும் இத்தனைக் காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை என்றும் முன்பதிவு வாயிலாக மட்டுமே லியோ ரூ.5.4 கோடியை வசூலித்திருக்கும் எனக் கூறுகின்றனர்.

மலையாள சினிமாவில் தற்போதைய வசூல் மன்னனாக இருக்கும் துல்கர் சல்மானின் ‘கிங்க் ஆஃப் கொத்தா’ திரைப்படம் முன்பதிவு வாயிலாக ரூ.3.43 கோடியைத்தான் வசூலித்தது. அதேநேரம், ரஜினிகாந்த்தின் ஜெயிலர் திரைப்படம் கேரளத்தில் முதல்நாள் வசூலாக ரூ.5.85 கோடி வசூலித்திருந்தது. ஆனால், லியோ மூலம் அண்டை மாநிலத்தில் ரஜினியின் சாதனையை விஜய் முறியடிப்பார் என்றே நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, கேரளத்தில் உச்ச நட்சத்திர நடிகர்களான மோகன்லால், மம்மூட்டிக்குக் கிடைக்காத வரவேற்பு தமிழ் சினிமாவைச் சேர்ந்த விஜய்க்குக் கிடைத்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும், கேரளத்தில் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்கு துவங்குவதால் தமிழகத்திலிருந்து பல ரசிகர்கள் அங்கு முன்பதிவு செய்திருப்பார்கள் என்பதால், விஜய்யின் லியோ சாதனைகளைச் செய்ய காத்திருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments