லியோ ஓடிடி தேதி இதுதானா?
லியோ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் உலகம் முழுவதும் 6,000 திரைகளில் வெளியானது.
இதுவரை வெளியான தமிழ்ப்படங்களிலேயே அதி வேகமான வசூல் லியோதான் என்கிற அளவிற்கு உலகம் முழுவதும் இப்படம் வருவாயை ஈட்டி வருகிறது.
இதையும் படிக்க: எப்படிடா இருக்க..? யாரைச் சொன்னார் விஜய்?
Advertisement
Advertisement
இப்படம் 7 நாள்களில் ரூ.461 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிகமான வசூலித்த படங்களில் லியோ முதலிடத்தில் இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: லலித் குமாருக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.