தனுஷ் படத்தில் வரலட்சுமி?
தனுஷ் 50 படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
தனுஷ், வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதையும் படிக்க: 2 கோடிப் பார்வைகள்... ரசிகர்களைக் கவரும் மார்க் ஆண்டனி டிரைலர்!
மேலும், தனுஷ் 50 படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க, நடிகர் தனுஷ் அணுகியதாக நேர்காணல் ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.