பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிக்கும் கௌதமி!
நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிகை கௌதமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பவன் கல்யாண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான ‘புரோ’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக உஸ்தாத் பகத் சிங் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கான இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்கி வருகிறார். நாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.
இதையும் படிக்க: காந்தாரா - 2: உடல் எடையைக் குறைத்த ரிஷப் ஷெட்டி!
Advertisement
Advertisement
இந்நிலையில், இப்படத்தில் பவன் கல்யாணுக்கு அம்மாவாக நடிகை கௌதமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடிகை ராதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.