வசூலில் கலக்கும் ஆர்டிஎக்ஸ்: மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர்!
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுவருகிற ஆர்டிஎக்ஸ் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.
கேரளத்தில் ஓணம் வெளியீடாக திரைக்கு வந்த படம் ஆர்டிஎக்ஸ்- ராபர்ட் டோனி சேவியர். ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் ஆக்சன் படமாக இது உருவாகியிருந்தது.
அதேநாளில், கிங்க் ஆஃப் கொத்தா திரைப்படமும் வெளியானது. ஆனால், அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ரசிகர்கள் ஆர்டிஎக்ஸ் பக்கம் திரும்பினர்.
இதையும் படிக்க: இப்போதான் இந்த ஓடிடி எல்லாம்.. கடந்த 64 ஆண்டுகளாக டிடி தான்!
Advertisement
Advertisement
தமிழ் சணடைப் பயிற்சியாளர்களான அன்பறிவு மாஸ்டர்கள் அட்டகாசமான சண்டைக் காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனால், அப்படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்தது. இந்நிலையில், இப்படம் 22 நாள்களில் உலகளவில், ரூ.80 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்காக நடிகர் ஷேன் நிகம் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.