முகப்பு
செய்திகள்

நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சாய் பல்லவி?: படக்குழு வெளியிட்ட விடியோ!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 23வது படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 19 செப்டம்பர் 2023, 4:49 pm IST
பகிர்:

முன்னணி தெலுங்கு நடிகரும் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவின் 23வது படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை சந்தோ மோன்டெடி இயக்க உள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

முதலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக இருந்த இந்த கதாபாத்திரத்தில் தற்போது சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயக்குநர் ஏற்கனவே 2018இல் நாக சைதன்யாவுடன் சாவ்யாச்சி எனும் படத்தினை இயக்கியுள்ளார். தெலுங்கு பிரேமம் எடுத்தவரும் இவர்தான். 

Advertisement

Advertisement

இந்தப் படம் மீனவர்கள் பற்றிய படமாக இருக்குமெனவும் அதற்காக நாக சைதன்யா ஸ்ரீகாகுளம் பகுதியில் மீனவ சமூகத்தினரை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நாக சைதன்யாவின் 22வது படம் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி மோசமான விமர்சனங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 24வது படம் குஷி படம் இயக்குநருடன் அமையவிருக்கிறது. 

சாய் பல்லவி தற்போது சிவ கார்த்திகேயனின் 21வது படத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி, நாக சைதன்யாவுடன் ஏற்கனவே ‘லவ் ஸ்டோரி’ படத்தில் நடித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. 

படக்குழு வெளியிட்ட விடியோவில் முகம் காண்பிக்காமல் இருப்பது சாய்பல்லவிதானென ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments