செய்திகள்

நடிகர் பிரசாந்த் பிறந்தநாளில் புதிய போஸ்டரை வெளியிட்ட ‘கோட்’ படக்குழு!

நடிகர் பிரசாந்த் பிறந்தநாளில் கோட் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் பிரசாந்த் பிறந்தநாளில் கோட் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

வைகாசி பொறந்தாச்சி எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். பின்னர் பாலு மகேந்திரா படத்தில் நடித்தார். ஆணழகன் என ரசிகைகளால் புகழப்பட்ட பிரசாந்த் 1990முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தினார்.

நடனம், சண்டைக் காட்சிகள், நடிப்பு என அசத்தினாலும் 2000க்குப் பிறகு அவர் உடல் பருமனாகி தனது அழகினையும் இழந்தார். அத்துடன் அவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாததால் 2006முதல் 2011 வரை படங்களில் நடிக்காமல் இருந்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான ஜானி 2018ல் வெளியானது.

2018இல் ஹிந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற அந்தாதுன் படத்தின் ரீமேக்காக அந்தகன் படம் உருவானது. ஆனால் இன்னும் இந்தப் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார். 51வது பிறந்தநாளை கொண்டாடும் பிரசாந்த்துக்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு கோட் படக்குழு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

கோட் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். துபையில் தற்போது படப்பிடிப்பு நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

SCROLL FOR NEXT