நித்யா மேனனின் புதிய பட அறிவிப்பு!
நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னட படத்தின் மூலம் 2006-இல் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நித்யா மேனன். அதன்பின், தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகர்களுடன் நடித்து தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார் நித்யா மேனன்.
குறிப்பாக, தமிழில் அவர் நடிப்பில் வெளியான, ‘காஞ்சனா - 2’, ‘ஒகே கண்மணி’, ‘மெர்சல்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகியவை அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.
அவர் நடிப்பில் உருவான ‘குமாரி ஸ்ரீமதி’, 'மாஸ்டர்பீஸ்’ ஆகிய இணையத்தொடர்களும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது நடிகர் தனுஷின் 50வது படமான ராயன் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
காதலில் தோல்வியடைந்த பெண் பாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கும் புதிய படம் 'டியர் எக்ஸஸ்'. இப்படத்தை அறிமுக இயக்குநர் காமினி இயக்குகிறார்.
இந்தப் படத்தில் வினய் ராய், நவ்தீப், தீபக் பரம்பொல் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ப்ரீத்தா ஜெயராமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், நடிகை நித்யா மேனன் பிறந்த நாளை முன்னிட்டு டியர் எக்ஸஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.