முகப்பு
செய்திகள்

‘ஈரம்’ பட இயக்குநரின் ‘சப்தம்’ டீசர்!

ஈரம் படத்தின் கதாநாயகன் ஆதியுடன் நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள சப்தம் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 12 ஏப்ரல் 2024, 5:59 pm IST
பகிர்:

ஈரம், வல்லினம், குற்றம் 23 திரைப்படங்களை இயக்கிய அறிவழகன் சப்தம் எனும் இயக்கியுள்ளார். இயக்குநர் அறிவழகன், தான் இயக்கிய முதல் படமான ஈரம் படத்தின் கதாநாயகன் ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

ஹாரர் திரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு  சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் படம் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.