ரத்னம் வசூல் எவ்வளவு?
ரத்னம் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள திரைப்படம் ரத்னம். இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார்.
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்த மூன்றாவது படம் இது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் சுமாரான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரத்னம் இரண்டு நாள்களில் ரூ.5 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.