அமரன் வெளியீடு எப்போது?
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்தப் படத்துக்கு அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன்நடித்துள்ளார்.
பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அமரன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தை செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.