சிவகார்த்திகேயன் படத்தில் பிஜு மேனன்!
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிகர் பிஜு மேனன் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகவுள்ளது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
மேலும், நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் பிஜு மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அய்யப்பனும் கோஷியும் படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கிய பிஜு மேனன் அப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் வென்றார். தமிழில் மஜா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.