FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோட் டிரைலர் அறிவிப்பில் தாமதம்! புதிய போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கோட் திரைப்படத்தின் டிரைலர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.

14 ஆகஸ்ட் 2024, 6:54 pm IST
பகிர்:

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

செப்.5 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதால், இதன் இறுதிக்கட்ட விஎஃப்எக்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

கோட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இந்த நிலையில், கோட் படத்தின் டிரைலர் குறித்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “டிரைலர் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்பதை மீண்டும் உறுதியளிக்கிறேன். சிறந்த பகுதியை நீங்கள் பார்க்க வேண்டும் என நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அதனால் தளபதியை திரையில் பார்க்க காத்திருக்கும் உங்களுக்கு புதிய போஸ்டர்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments