நடிகர் நகுல் 
செய்திகள்

ஆணுறைகளை வாங்கிவர கட்டாயப்படுத்திய நடிகர் நகுல்! துணை இயக்குநர் புகார்!

வாஸ்கோடகாமா படத்தின் துணை இயக்குநர் நடிகர் நகுல் மீது புகார் தெரிவித்துள்ளார்.

DIN

பிரபல நடிகை தேவயானியின் சகோதரரான நகுல், 2003-ல் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2008-ல் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆகி இதுவரை பல படங்களில் நடித்துள்ளார். சில பாடல்களையும் பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.  

தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுவருகிறார் நகுல். 'எரியும் கண்ணாடி' மற்றும் 'வாஸ்கோடகாமா' என இரண்டு படங்கள் நீண்ட நாள்களாக வெளிவராமல் இருந்தன.

இயக்குநர் ஆர்ஜிகே இயக்கத்தில் உருவான இப்படத்தில் நகுலுடன் நடிகர்கள் ஆர்த்தனா பினு, கேஎஸ் ரவிக்குமார், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வாஸ்கோடகாமா திரைப்படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தில் வேலை செய்த துணை இயக்குநர் நகுல் குறித்து புகார் தெரிவித்துள்ளார். அவர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:

ஒருநாள் படப்பிடிப்பில் 3 ஆணுறைகளை வாங்கிவரும்படி நடிகர் நகுல் கூறினார். நான் வேலையிருப்பதாகாக்கூறியும் அழுத்தம் கொடுத்தார். நான் மறுக்கவே பின்னர் என்னை படப்பிடிப்பில் இருந்து தூக்கிவிட்டார். 2 வருடம் வேலை செய்ததுக்கு சம்பளமும் தரவில்லை. படத்தில் என் பெயரும் வரவில்லை. முதலில் நடிகை பிரிகிடா நடிக்கவிருந்தது. அவர் அட்ஜஸ்மென்ட்டுக்கு ஒத்துழைக்கமாட்டார் என்பதால் அவரை படத்தில் இருந்து தூக்கிவிட்டார் என்றார்.

அவர் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT