FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நடிகர் சூர்யாவை ஏமாற்றி, வெங்கட் அட்லுரி செய்த செயல்! வைரல் விடியோ!

இணையத்தில் வைரலாகும் வெங்கட் அட்லுரி விடியோ...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 11:32 am IST
நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கட் அட்லுரி
பகிர்:

நடிகர் சூர்யாவை இயக்குநர் வெங்கட் அட்லுரி ஏமாற்றி செய்த செயல் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதிகாவும் நடித்துள்ளனர். உறவுகளின் மேன்மையைப் பேசும் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் வெளியாகி ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரியைப் புகழ்ந்தார். அப்போது, திடீரென அருகே நின்றுகொண்டிருந்த வெங்கட் அட்லுரி சூர்யாவிடம் யாரோ அழைக்கிறார்கள் என மேலே பார்க்கச் சொன்னார்.

ஒருகணம் சூர்யா மேலே திரும்பிப்பார்க்க, அந்த நேரத்தில் வெங்கட் அட்லுரி நடிகர் சூர்யாவின் காலைத் தொட்டு வணங்கினார். இதனைக் கண்ட சூர்யா, வெங்கட் அட்லுரியைத் துரத்தினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் நெகிழச் செய்திருக்கிறது. ரசிகர்கள் யாரும் தன் காலில் விழக்கூடாது என்பதில் சூர்யா கறாராக இருப்பவர் என்பதால் நேரடியாக விழ முடியாது என்பதைப் புரிந்துகொண்டு வெங்கட் அட்லுரி செய்த செயல் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.

A move by director Venkat Atluri to deceive actor Suriya is garnering attention among fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments