முகப்பு
செய்திகள்

வாழை - மாரி செல்வராஜை முத்தமிட்டு பாராட்டிய பாலா!

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 1:06 pm IST
பகிர்:

வாழை திரைப்படத்தை இயக்குநர் பாலா பாராட்டியுள்ளார்.

மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இந்தப் படம் நாளை (ஆக.23) திரையரங்குகளில் வெளியாகிறது.

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படத்தின் சிறப்பு திரையிடல்களில் தமிழின் முக்கியமான இயக்குநர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் படத்தைப் பார்த்து பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வாழை படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தமிட்டு தன் பாராட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

இதனை, ’முத்தம்’ எனக் குறிப்பிட்டு தன் முகநூல் பக்கத்தில் பாலாவுடனான சந்திப்பைப் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.