முகப்பு
செய்திகள்

கோட் படத்தில் வாரிசு அரசியல்? எக்ஸில் அஜித் ரசிகருடன் வெங்கட் பிரபு வாக்குவாதம்!

அஜித் ரசிகருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் எக்ஸ் தளத்தில் நடக்கும் பிரச்னை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Updated On : 30 ஆகஸ்ட் 2024, 2:47 pm IST
பகிர்:

இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது.

Advertisement

Advertisement

இதற்கான புரமோஷ பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் வெங்கட் பிரபு எப்போதும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு நபர். இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படம் வாரிசு அரசியலை மையமாக வைத்து எடுத்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, “எஸ்.ஏ.சி. பையன், தியாகராஜன் பையன், சுந்தரம் மாஸ்டர் பையன், மலேசிய வாசுதேவன் பையன், இளையராஜா பையன், கங்கை அமரன் பசங்க, கல்பாத்தி அகோரம் பொண்ணுங்க இணைந்து மிரட்டும் கோட்” என கமெண்டில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, “நன்றி சகோதரர். உங்களது அப்பா பெயரை சொல்லிடுங்க அவருக்கும் நன்றி சொல்லிவிடுகிறேன்” எனக் கூற, அதற்கு அந்த அஜித் ரசிகர், “தேவையில்லை சகோதரர். நான் வாரிசு அரசியலில் வந்தவன அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments