முகப்பு
செய்திகள்

மெய்யழகன் பார்த்து அழுதேன்: அனுபம் கெர்

மெய்யழகன் குறித்து அனுபம் கெர்...

Updated On : 8 டிசம்பர் 2024, 10:57 am IST
பகிர்:

நடிகர் அனுபம் கெர் மெய்யழகன் படத்தைக் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடித்த மெய்யழகன் திரைப்படத்தை இயக்குநர் ச. பிரேம் குமார் இயக்கியிருந்தார்.

ஊரும் உறவுகளும் நினைவுகளுமாக உருவாகியிருந்த இப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சைக்கிள் காட்சி பெரிதாகக் கவனம் ஈர்த்தது. மெய்யழகன் பார்த்தபின் வெளிநாடுகளில் வசிக்கும் பல தமிழர்களும் தங்கள் ஊர்களை, உறவினர்களைக் குறித்து பதிவு செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

திரையரங்க வெளியீட்டிற்குப் பின் ஓடிடியில் வெளியானதும் படத்திற்கு இந்தியளவில் கவனம் கிடைத்தது.

இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மெய்யழகன் திரைப்படம் பார்த்தேன். எளிமையான, அழகான அற்புதமான திரைப்படம். நிறைய அழுதேன். என் நண்பர் அர்விந்த் சுவாமி மற்றும் கார்த்தி இருவரும் சிறப்பாக நடித்திருந்தனர். இயக்குநர் பிரேம் குமார் உள்பட படக்குழுவினருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

அனுபம் கெரின் பதிவுக்கு நடிகர்கள் கார்த்தி மற்றும் அர்விந்த் சாமி இருவரும் நன்றி தெரிவித்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். மெய்யழகன் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments