முகப்பு
செய்திகள்

செல்வராகவன் பட போஸ்டரை வெளியிடும் தனுஷ்!

இயக்குநர் செல்வராகவன் படத்தின் புதிய போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.

Updated On : 13 டிசம்பர் 2024, 12:10 pm IST
செல்வராகவன் படத்தின் போஸ்டரை வெளியிடும் தனுஷ்
பகிர்:

இயக்குநராக விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற செல்வராகவன் சில காலம் திரைப்படங்களை இயக்குவதிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிகராக நடித்து வருகிறார்.

இறுதியாக, சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இயக்குநராக செல்வராகவன் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அதை நடிகரும் செல்வராகவனின் சகோதரருமான தனுஷ் வெளியிடுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு இசையமைத்த ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் கடைசியாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவன் என்ற படத்தை 2022இல் இயக்கினார்.

சுமாரான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படம் இயக்கவுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.