ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான்!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பின் திரைப்படம் இயக்காமல் இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்குவதாக இருந்த திரைப்படத்தின் பணிகளும் தொடர்ந்து தள்ளிப்போகிறது.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சஜித் நதித்வாலா தயாரிப்பில் ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக இது உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.