செய்திகள்

சசிகுமாரின் எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சசிகுமார் நடிக்கும் எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

DIN

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பின் நடிப்பில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. தொடர்ந்து, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலை அவர் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தற்போது, காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் இயக்கும் எவிடன்ஸ் நடித்து வந்தார் சசிகுமார்.

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு நடிக்கின்றனர். இப்படத்துக்கு ரான் ஈதன் ஹோஹான் இசையமைக்கிறார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலைடில், இப்படத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT