புதியதாக தயாரிக்கப்பட்ட உணவு! தன்னைத்தானே புகழ்ந்துகொண்ட பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்து தன்னைத்தானே புகழ்ந்துள்ளார்.
தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார்.
இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய நடிகையாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதேபோன்று பாலிவுட்டிலும் ’மொஹஞ்சதாரோ', ‘சர்க்கஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்திருந்தார்.
Advertisement
Advertisement
தற்போதுஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்புக்காக அந்தமானில் இருக்கிறார் பூஜா.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்களைப் பதிவிட்டு, “வேகவைத்து தயாரிக்கப்பட்ட புதிய மொமொ போலிருக்கிறேன்” என தன்னைத்தானே புகழ்ந்து பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் இதற்கு கமெண்டுகளில் ஆமாம் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.