முகப்பு
செய்திகள்

நிவேதா தாமஸின் கதாபாத்திர அறிமுகம்!

நடிகை நிவேதா தாமஸின் புதிய படத்தின் கதாபாத்திர அறிமுகம் வெளியாகவுள்ளது.

Updated On : 16 ஜூலை 2024, 1:58 pm IST
நிவேதா தாமஸ்
பகிர்:

நடிகை நிவேதா தாமஸ் தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய்யுடன் ஜில்லா, ரஜினியுடன் தர்பார் படங்களில் நடித்து கவனம் பெற்றவர். முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் நிதானமாக படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக சாகினி டாகினி (தெலுங்கு), எந்தாடா சஜி (மலையாளம்) நல்ல வரவேற்பைப் பெற்றன.

Advertisement

Advertisement

35 சின்ன விஷயம் இல்ல போஸ்டர்

சமீபத்தில் தனது புதிய படத்தின் டீசரை வெளியிட்டார். ’35 சின்ன விஷயம் இல்ல’ என்ற இப்படத்தினை சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் உடன் மற்ற 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க நந்த கிஷோர் ஏமானி இயக்கியுள்ளார்.

நடிகர் ராணா டகுபதி இந்தப் படத்தினை வெளியிடவிருக்கிறார். கௌதமி, பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், நிவேதா தாமஸின் 35 நொடிகள் கதாபாத்திர அறிமுகம் நாளை (ஜூலை 17) மாலை 4.35 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சரஸ்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments