விஷ்ணு விஷால் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பு!
நடிகர் விஷ்ணு விஷால் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை இயக்கி ‘ராட்சசன்’ திரைப்படத்தின் மூலம் வெற்றியைக் கொடுத்தார்.
சில மாதங்களுக்கு முன், ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதன் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. கடைசியாக விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களப் பெற்றது.
Advertisement
Advertisement
இந்நிலையில் விஷ்ணு விஷால் பிறந்தநாளில் புதிய படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’ஓர் மாம்பழ சீனனில்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பேச்சிலர் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இதனை இயக்குகிறார்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் உடன் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கிறார். ஏற்கனவே இவரது நடிப்பில் ஆர்யன், மோகன்தாஸ் படங்களில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.