FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியன் - 2: 12 நிமிடங்கள் குறைப்பு!

17 ஜூலை 2024, 3:59 pm IST
பகிர்:

இந்தியன் - 2 திரைப்படத்தின் கால நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்று வருகிறது.

இப்படம் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியன் - 2 படக்குழு படத்தின் நீளத்தைக் குறைத்துள்ளனர். ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திய பகுதிகள் உள்பட 11.51 நிமிடக் காட்சிகளை நீக்கி புதிய வடிவத்தை உருவாக்கியுள்ளனர். இந்த புதிய வடிவம், இன்று முதலே திரையரங்குகளில் வெளியாயுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments