ஹலிதா ஷமீமின் மின்மினி டிரைலர்!
இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள மின்மினி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
‘பூவரசம் பீப்பி’, ‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ மற்றும் ‘லோனர்ஸ்’ உள்ளிட்ட விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹலிதா ஷமீமின் முந்தைய படைப்புகள் காரணமாக ‘மின்மினி’ படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன.
நடிகர்களின் உண்மையான வயதையும் பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக எட்டு வருடங்களாக காத்திருந்து மின்மினி திரைப்படத்தை எடுத்துள்ளனர். இதில், எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கெளரவ் காளை, பிரவின் மற்றும் கெளரவ் ஆகியோர் முதன்மை நடிகர்களாக நடித்துள்ளனர். .
Advertisement
Advertisement
‘மின்மினி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஆங்கர் பே ஸ்டுடியோவுடன் இணைந்து ‘மின்மினி’ படத்தைத் தயாரித்துள்ளார்.
நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இன்று வெளியிட்டுள்ளனர். இமயமலைக்குச் சென்று எடுக்கப்பட்ட காட்சிகள் கவனத்தை ஈர்க்கின்றன. மின்மினி ஆகஸ்ட் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.