இளையராஜாவுடன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
இசையமைப்பாளர் இளையராஜா உடன் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல்.
தமிழ் சினிமாவில் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் அதிகமாக இசையமைத்துள்ளார்.
இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீப காலமாக வெளியாகும் தமிழ்ப் படங்களில் இளையராஜாவின் பின்னணி இசைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் இதில் நாயகனக நடிக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார்.
Advertisement
ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக்கினை எப்படி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்து உள்ளது.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, "பேரின்பம்” எனப் பதிவிட்டுள்ளார்.