பா. இரஞ்சித் இயக்கத்தில் தினேஷ்!
இயக்குநர் பா. இரஞ்சித் அடுத்த பட வேலைகளைத் துவங்கியுள்ளதாகத் தகவல்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான இப்படத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பா. இரஞ்சித் அடுத்ததாக கேங்ஸ்டர் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு வேட்டுவம் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வேட்டுவம் படத்தின் போஸ்டர் வெளியிட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
தற்போது, இப்படத்தின் முதல்கட்ட பணிகளைத் துவங்கியுள்ளனராம். மேலும், இதில் நடிகர்கள் ஆர்யா மற்றும் அசோக் செல்வன் நடிப்பதாகத் தகவல்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.