இந்தியன் 2: ‘கதறல்ஸ்’ பாடலின் லிரிக்கல் விடியோ!
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் கதறல்ஸ் பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன்1ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சிவராஜ் குமார், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஏற்கெனவே படத்தில் இருந்து மொத்தப் பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். படம் ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.