முகப்பு
செய்திகள்

படத்தின் வணிக வெற்றிக்கு இதுதான் காரணம்: ரகசியம் உடைத்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி படத்தின் வெற்றிக்கு முக்கியமானதைக் குறித்து பேசியுள்ளார்.

Updated On : 15 ஜூன் 2024, 3:24 pm IST
பகிர்:

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். நேற்று (ஜூன் 14) விஜய் சேதுபதியின் 50ஆவது படமான மகாராஜா வெளியானது. நல்ல வரவேற்பு பெற்றுவரும் இந்தப் படத்துக்கு வணிக ரீதியிலும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

மகாராஜா திரைப்படம் கிட்டதட்ட 2000 திரைகளில் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவான இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

ஆங்கில ஊடகத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, “எனது முந்தையப் படங்கள் நல்ல கதை, நல்ல நடிப்பு என அனைத்தும் இருந்தும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. படத்தின் புரமோஷன்தான் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.

ஒரு படத்துக்காக விளம்பரம் செய்யும்படி எனது தயாரிப்பாளரிடம் பலமுறை கூறினேன், அவர் செய்யவில்லை. அது எனக்கு மிகப்பெரிய வாழ்க்கை பாடமாக அமைந்தது.

இந்திய சினிமாவுக்கு நானும் பங்களிப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினிகாந்த், ஷாருக்கான், கமல் சார் எனது நடிப்பு குறித்து பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

விடுதலை 2, காந்தி டாக்கீஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.