ரூ.50 கோடியை நெருங்கும் கருடன்!
நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் வசூல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.
நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வணிக வெற்றியைப் பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்றது.
Advertisement
Advertisement
இப்படம் மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ.42 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கருடன் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.