குட் பேட் அக்லி அப்டேட்!
நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இப்படத்திற்கு, ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன், போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், குட் பேட் அக்லியின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்தின் காட்சிகள் எடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார்.
இந்த நிலையில், இன்று மாலை 6.40 மணிக்கு குட் பேட் அக்லியின் அப்டேட் வெளியாகும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது, படத்தின் இரண்டாவது போஸ்டராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.