FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 8 மார்ச் 2024, 3:39 pm IST
பகிர்:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய திரைபடங்களை இயக்கியவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த மாமன்னன் உதயநிதி ஸ்டாலின் கடைசி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாழை படத்தினை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கவிருக்கிறார். இதற்கடுத்து நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தினை 2025இல் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் தாயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் கார்த்தியின் 25வது படம் (ஜப்பான்) தோல்வியடைந்தது. இவரது 26வது படத்தினை நலன் குமாரசாமி இயக்குகிறார். 27வது படத்தினை சி.பிரேம்குமார் இயக்குகிறார். இதற்கடுத்து சர்தார் 2, கைதி 2 படங்களும் இருக்கின்றன.

இதில் மாரி செல்வராஜ் இயக்கும் படம் 2025இல் படப்பிடிப்பு நடந்து அதேயாண்டு வெளியாகுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments