மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தில் அனுபமா பரமேஸ்வரன்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை அனுபமா இணைந்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடிகை அனுபமா இணைந்துள்ளார்.
கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்ற 'போர் தொழில் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன் நிறுவத்துடன் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் முயற்சியாக, இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் துருவ் விக்ரமை வைத்து இயக்கவுள்ள புதிய படத்தைத் தயாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement
கபாடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் நாயகியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.