FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்: அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பேச்சு கவனம் பெற்றுள்ளது...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 11:41 am IST
நடிகை அனுபமா பரமேஸ்வரன்
பகிர்:

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் சமூக வலைதளப் பதிவு குறித்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். நீண்ட காலமாக நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்துப் பேசப்பட்டு வந்த நிலையில்தான், நடிகை அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

அதில், "இத்தனை புகைப்படங்களை ஒரே நேரத்தில் பகிர்ந்ததற்கு மன்னிக்கவும். ஒப்புதல்கள், பாடல்களைத் தேர்ந்தெடுப்பது அல்லது வேறொருவரின் குறிப்புக்காகக் காத்திருக்கத் தேவையில்லை என்றால், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக மாறுகிறது என்பதை இப்போதுதான் உணர்கிறேன்," என்ற வாசகத்துடன் அவர் தன்னுடைய பல புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

Advertisement

Advertisement

இதனால், துருவ் விக்ரமும் அனுபமாவும் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இருவரும் காதலிப்பதாக கூறவில்லை என்றாலும் அதனை மறுக்கவும் செய்யவில்லை என்பதால் அனுபமாவுக்கு பிரேக்-அப் என ரசிகர்கள் அப்பதிவை வைரலாக்கினர்.

இந்த நிலையில், பேட்டியொன்றில் பேசிய அனுபமா பரமேஸ்வரன், ”என்னையும் என் வாழ்க்கையையும் பற்றி வெளியில் உள்ளவர்களுக்கு என்ன தெரியும்? எனது சொந்த சமூக வலைதளக் கணக்கில் என்ன பதிவிட வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பெண்ணாக என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டுமே பகிர்ந்தேன். அதற்காக பெருமைப்படுகிறேன். வேண்டுமென்றே எதையும் பகிரவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Anupama Parameswaran has spoken about her social media post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments