என் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு ஆறுதல் சொல்பவர் துல்கர் சல்மான்: அனுபமா பரமேஸ்வரன்
துல்கர் சல்மான் குறித்து அனுபமா பரமேஸ்வரன்...
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன் கஷ்டங்களில் துணை நிற்பவர் துல்கர் சல்மான் எனக் கூறியுள்ளார்.
நடிகை அனுபமா பரமேஸ்வர் அண்மையில் தன் காதல் தோல்வி குறித்து பேசியதுடன் தன் முன்னாள் காதலர் தன்னை அவ்வளவு துன்புறுத்தியதாகக் கூறினார்.
இதுகுறித்துப் பேசியவர், “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.
Advertisement
Advertisement
நினைத்துப் பாருங்கள், ஒருநாள் அவர் ரெமோ. அப்படியொரு காதல்... நாம் மிக கொடுத்த வைத்த ஆள் என்கிற அளவுக்கு கனவுகள் துளிர்க்கும். அடுத்த நாள், அந்நியனாகிவிடுவார்; மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். பின், அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார். நடிகை மடோனா செபாஸ்டியன் தன் நார்ஸிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசிய போதுதான், நாமும் இப்படியான சூழ்நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்.” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் துல்கர் சல்மானைக் குறிப்பிட்டு, ‘என் கஷ்ட காலங்களில் எப்போதும் துல்கர் பக்கபலமாக இருந்திருக்கிறார். நான் மன ரீதியான குழப்பத்திலோ அல்லது சோர்வாக இருந்தாலோ துல்கர் சல்மானிடமிருந்து குறுஞ்செய்தி வந்துவிடும். அவரிடம் சிறிது நேரம் பேசினாலே நமக்கு மனம் இலகுவாகிவிடும். என் இக்கட்டான நேரங்களில் அவர் ஆறுதலாக இருக்கிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actress Anupama Parameswaran has stated that Dulquer Salmaan stands by her during her difficult times.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.