என் பாதுகாப்பான இடம்... அப்பாவை வாழ்த்திய மகன்!
நடிகர் துல்கர் சல்மான் தன் தந்தை மம்மூட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்...
நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த துல்கர் சல்மான்.
நடிகர் மம்மூட்டி நேற்று (செப். 7) தன் 75-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்காக, சினிமாதுறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களின் அப்டேட்களும் ஒன்றன் பின் ஒன்றான வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
முக்கியமாக, நடிகர் தனுஷுக்கு வில்லனாக ஓம் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் பர்மா கார்த்திகேயன் என்கிற கடத்தல்காரராக மம்மூட்டி நடித்துள்ளதை கிளிம்ஸ் வெளியிட்டு தெரிவித்தனர். இந்த விடியோ தமிழ், மலையாள ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று பலரும் மம்மூட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இன்றைய இயக்குநர்கள் யோசிக்க வேண்டும் என அந்த கிளிம்ஸை பாராட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, நடிகரும் மம்மூட்டியின் மகனுமான துல்கர் சல்மான் இன்ஸ்டாகிராமில், தன் தந்தை மம்மூட்டியின் தோளில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “அப்போதும், இப்போதும், எப்போதும்... உலகிலேயே என்னுடைய பாதுகாப்பான இடம். பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா. உங்களை மிக அதிகமாக நேசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானின் இப்பதிவை பலரும் விருப்பம் தெரிவித்து காமெண்ட்களில் மம்மூட்டியை வாழ்த்தி வருகின்றனர்.
Dulquer Salmaan extended birthday wishes to his father actor Mammootty.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.