லோகேஷ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ பாடல்!
நடிகை ஸ்ருதிஹாசன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள இனிமேல் பாடல் வெளியானது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கவுள்ளார். ரஜினி - 171 படமாக இது உருவாக உள்ளது. இதற்கான திரைக்கதை வேலைகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, ’இனிமேல்’ என்கிற பெயரில் துவங்கும் நடிகை ஸ்ருதி ஹாசனின் பாடலில் லோகேஷ் கனராஜ் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ராஜ்கமல் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் வரிகளில் நடிகை ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கியுள்ள இந்த பாடலில் லோகேஷுடன் ஸ்ருதிஹாசனும் இணைந்து நடித்துள்ளார்.
இந்த பாடலில் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், பாடலின் முழு விடியோவைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.