ரோமியோ டிரைலர்!
விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நாயகனாக நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம் ஆகிய படங்கள் சுமாரான வெற்றிகளைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனி இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ‘ரோமியோ’ என்கிற காதல் படமொன்றில் நடித்து வருகிறார். நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருமணத்தில் விருப்பமில்லாத மனைவியைக் காதலிக்கும் கணவனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவான ரோமியோ கோடை வெளியீடாக திரைக்கு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.