முகப்பு
செய்திகள்

கேம் சேஞ்சர் அப்டேட்!

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 26 மார்ச் 2024, 11:46 am IST
- DOTCOM
பகிர்:

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில்தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஜரகண்டி’ பாடல் நாளை(மார்ச்.27) காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments