ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ஃபேமிலி ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா அளவில் டிரெண்டானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் கவனம் பெற்றன. அவரது நடிப்பில் சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃபேமலி ஸ்டார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் தெரிவித்தது. மேலும் படம் வரும் ஏப்ரல் 5ஆம் நாள் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.