பையா மறுவெளியீட்டுத் தேதி!
நடிகர் கார்த்தி நடித்த பையா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது பையா.
பருத்திவீரன் படத்திற்குப் பின் கார்த்தியின் கிராம தோற்றத்தை மாற்றிய படம் என்கிற பெருமையைக் கொண்டது பையா.
இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் விரைவில் மறுவெளியீடு செய்யப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தை வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.